முஷாரஃஃபின் தைரியம்
கார்கில் போருக்கு முன் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் இந்திய
பகுதிக்க்குள் ஊடுருவி பத்து நாட்களுக்கு மேல் தங்கி சென்றதாக செய்தி. இது அவரின்
தைரியத்தை காட்டினாலும் நமது முன்னாள்
தளபதி திரு. வி.கே.சிங் கூறியதைப்போல தவறு மட்டுமல்ல. இந்திய உளவுத்துறையின்
வீழ்ச்சியுமாகும். இனிமேலுமாவது விழித்துக்கொள்வோமாக!
கமலின்
விஸ்வரூபம்
கமலின் விஸ்வரூப
பிரச்சினை விஸ்வரூபமாகி தற்போது சமரசமாகி படம் வெளியாகவுள்ளது.தியேட்டர் திரையிடக்கிடைப்பதிலும்
பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற பயம் உள்ளது.கமலின் உணர்வுகள் அதாவது ஒரு
கலைஞனின் உணர்வுகள் காயப்படுத்தப்பட்ட்தால் அவரும் உணர்ச்சி வயப்பட்டுள்ளார்.அதன் விளைவாக நாட்டைவிட்டு வெளியேறுவேன் என்றார். அவர் கூறிய பிற வார்த்தைகளையும்
கவனதில் கொள்ளவேண்டும். தனித்து பொருள் கொள்ளக்கூடாது.
புதிய
தலைமை செயலகம். மன்னிக்கவும். புதிய மருத்துவமனை.
உயர் நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிடமுடியாது என்று தீர்ப்பளித்தைபயடுத்து
செயல்பட துவங்கிவிட்ட்து. உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை
நாம் மதிக்க்வேண்டும். இருந்தபோதிலும் அரசின் கொள்கை முடிவு எல்லாவற்றிக்கும் பொருந்துமா
என்று நீதிமன்றங்கள் ஆராயவேண்டியிள்ளது. எனெனில்
அடுத்து வரும் அரசுகளும் கொள்கை முடிவு என்ற பெயரில் தவறுயிழைக்க வாய்பிருக்கிறது.
No comments:
Post a Comment